Home நாடு தர்மேந்திரன் மரணத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு

தர்மேந்திரன் மரணத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு

503
0
SHARE
Ad

dharma

கோலாலம்பூர், ஜூன் 5 – தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட தர்மேந்திரனின் இறப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளின் மீது கொலைக் குற்றம் சாட்டப்படவுள்ளது.

தர்மேந்திரன் இறப்பு தொடர்பான விசாரணையில் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, இதில் சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகளின் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலைக் குற்றம் சாட்ட முடிவு எடுத்திருப்பதாக  வழக்கறிஞர் ஜெனரல் அப்துல் கனி பட்டேல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று பிற்பகல் அவர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்படவுள்ளது. ஆனால் எத்தனை பேரின் மீது அக்குற்றம் சாட்டப்படவுள்ளது என்பது பற்றி தகவல் தெரிவிக்கப்படவில்லை.