Home நாடு பினாங்கு நீதிமன்ற கட்டிடத்தில் வெடிகுண்டு புரளி

பினாங்கு நீதிமன்ற கட்டிடத்தில் வெடிகுண்டு புரளி

562
0
SHARE
Ad

OLYMPUS DIGITAL CAMERA

பினாங்கு, ஜூன் 11 – பினாங்கு உயர் நீதிமன்றத்தில் இன்று காலை 11 மணியளவில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கிருந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய 100 க்கும் மேற்பட்டோர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.

கே 9 என்ற பிரிவைச் சேர்ந்த வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் நீதிமன்றத்திற்குள் சோதனையை மேற்கொண்டனர்.

#TamilSchoolmychoice

“காலை 10 மணியளவில் எங்களுக்கு மர்ம தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவன் இரண்டு வெடிகுண்டுகள் நீதிமன்ற வளாகத்திற்குள் இருப்பதாகக் கூறினான்” என்று பினாங்கு மாநில குற்ற புலனாய்வு துறை தலைவர் எஸ்.ஏ.சி மஸ்லான் கேசா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சில நிமிட தேடலுக்குப் பிறகு வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்று உறுதியானவுடன் நிபுணர்கள் அங்கிருந்து சென்றனர்.