Home நாடு சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள் – சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தல்

சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள் – சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தல்

576
0
SHARE
Ad

DYMM-Sultan-Selangor-300x243சிலாங்கூர், ஜூன் 28 – தனிப்பட்ட சில பிரிவினரின் நன்மைக்காக சட்டதிட்டங்களை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

“நாட்டின் சட்டதிட்டங்களை பின்பற்றுங்கள். மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கத்திற்கு மதிப்பளியுங்கள் என்று பொதுமக்கள் மற்றும் கட்சிகளை அனைத்தையும், குறிப்பாக சிலாங்கூர் மாநில மக்களை அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று இன்று 13 வது மாநில சட்டமன்ற தொடக்க நிகழ்வில் உரையாற்றினார்.

மேலும், மக்கள் தங்களது தனிப்பட்ட நலன்கள் மற்றும் அரசியலுக்கு மதிப்பளிப்பதை விடக் கூடுதலாக சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், நமது அன்றாட வாழ்வில் மற்ற இனங்களுக்கு மதிப்பளித்தும், சட்ட விதிமுறைகளைப் பின்பற்றியும் வாழ்ந்தால், நாட்டில் தொடர்ந்து அமைதி, ஒற்றுமை, வளம் ஆகியவை நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice