கோலாலம்பூர், ஜூலை 1 – பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா ‘மை’ குறித்து விசாரணை செய்ய புதிய குழு ஒன்றை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் நியமித்துள்ளது.
இந்த அழியாமை வாங்கப்பட்டதிலும், அதை மே 5 பொதுத்தேர்தலில் பயன்படுத்தியதிலும் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பதை இந்த குழு ஆராயும் என்று அதன் இயக்குனர் முஸ்தபார் அலி தெரிவித்துள்ளார்.
அழியா ‘மை’ யில் பயன்படுத்தப்பட்டது ரசாயனங்கள் இல்லை அவை உணவில் சேர்க்கப்படும் வண்ணங்கள் என்று கடந்த வாரம் பிரதமர் துறை அமைச்சரான ஷாஹிடான் காஸிம் அறிக்கையொன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணைய துணைத் தலைவர் வான் அகமட் வான் ஓமார், அழியா ‘மை’ தொடர்பான விசாரணைக்குத் தாங்கள் தயார் என்றும், தேர்தல் ஆணையம் அதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.