Home உலகம் லிட்டில் இந்தியா கலவரம் மன்னிக்க முடியாத குற்றம்- பிரதமர் லீ

லிட்டில் இந்தியா கலவரம் மன்னிக்க முடியாத குற்றம்- பிரதமர் லீ

519
0
SHARE
Ad

lee (2)

சிங்கப்பூர், ஜன 2-  ‘ லிட்டில் இந்தியா கலவரம் மன்னிக்க முடியாத குற்றம். சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்கள் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடந்தால் அவர்களை கெளரவமாக நடத்துவோம்’ என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹீசைன் லூங் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 8ம் தேதி சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்ற சாலைவிபத்தில் தமிழர் ஒருவர் பலியானார். இதைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில், 40 காவல்துறையினர் படுகாயமடைந்தனர்.

25 ரோந்து கார்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதையடுத்து, 25 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். 56 பேர் நாடு கடத்தப்பட்டனர். 200க்கும் மேற்பட்டவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட தமிழர்கள் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. சிங்கப்பூர் தனது கட்டுமானம் உள்ளிட்ட பல தொழில்களுக்கு வெளி நாட்டு பணியாளர்களை நம்பியுள்ளது என்பதால், அவர்கள் மீது கருணையுடன் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் புத்தாண்டு தினத்தை ஒட்டி, சிங்கப்பூர் பிரதமர் லீ ஹீசைன் லூங் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். இதில், ‘லிட்டில் இந்தியா பகுதியில், வெளிநாட்டு வேலையாட்களால் நடந்த கலவரம் மன்னிக்க முடியாதது. இதற்கு காரணமானவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சிலர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். பலருக்கு சட்டத்தை மதித்து நடக்கவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கலவரம் தொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் தடுக்கமுடியும்.

வெளிநாட்டு ஆட்களை வேலைக்கு எடுப்பதற்கு கட்டுபாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாக இருக்கும். இதற்கு மாற்றாக தொழில் நிறுவனங்களில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். சிங்கப்பூர் மக்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.