Home நாடு டெங்கி அபாயம்! பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

டெங்கி அபாயம்! பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

484
0
SHARE
Ad

m_dengue_400_272_100பெட்டாலிங் ஜெயா, ஜன 3 – டெங்கி காய்ச்சலுக்கு மேலும் 4 பேர் பலியாகியுள்ளதால், கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி தற்போது வரை பலியானோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

டிசம்பர் 14 ஆம் தேதிக்கு முன்பு வரை 83 பேர் பலியாகியிருந்தனர். கடந்த 2012 ஆம் ஆண்டு இதே சமயத்தில் 35 பேர் பலியாகியிருந்தனர். எனவே இந்த ஆண்டு பலியானவர்களின் எண்ணிக்கை 137 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

“பலியான 4 பேரில் இருவர் ஜோகூர் பாருவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் லேடாங்கைச் சேர்ந்தவர். மேலும் ஒருவர் சபா மாநிலம் சண்டாக்கான் பகுதியைச் சேர்ந்தவர்” என்று சுகாதாரத்துறையின் நோய் தடுப்புப் பிரிவு மூத்த துணை இயக்குனரான டாக்டர் முகமட் ஸாகி அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சுகாதாரத்துறை அறிக்கையின் படி,2013 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை, நாடு முழுவதும் டெங்கி காய்ச்சலால் 39,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டில் 20,923 பேர் பாதிக்கப்பட்டனர்.

அதன்படி, 2012 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2013 ஆம் ஆண்டில் டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது.