Home நாடு என்னை மன்னித்துவிடுங்கள் – வேதமூர்த்தி வருத்தம்

என்னை மன்னித்துவிடுங்கள் – வேதமூர்த்தி வருத்தம்

786
0
SHARE
Ad

waythaபெட்டாலிங் ஜெயா, பிப் 17 – மலேசிய இந்தியர்களுக்கு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாமல் போனதற்காக ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி இன்று அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கடந்த மே 5 பொதுத்தேர்தல் சமயத்தில் தேசிய முன்னணியுடன், ஹிண்ட்ராப் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, இந்தியர்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் எந்த ஒரு மாற்றமும் கொண்டு வர இயலாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்து வேதமூர்த்தி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“எங்களின் மீது நம்பிக்கை வைத்து பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு வாக்களித்த ஏழை மக்கள், எவ்வளவு அதிருப்தியில் இருப்பார்கள் என்பதை அறிவோம். நாங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்திய மக்கள் தேசிய முன்னணிக்கு வாக்களித்தார்கள். தேசிய முன்னணியும் குறைவான பெரும்பான்மையில் வெற்றி பெற்றது” என்று வேதமூர்த்தி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், அந்த சமயத்தில் தங்களால் இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வருவதற்கு அரசாங்கத்தின் மூலம் பல்வேறு திட்டங்களை கொண்டு வர முடியும் என்று நம்பியதாகவும், ஆனால் பிரதமர் சொன்னபடி திட்டங்களை வகுப்பார் என்று கடந்த 8 மாதங்களாக பொறுமையுடன் காத்திருந்ததாகவும் வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பிரதமர் நஜிப் கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றுவது போல் தெரியாததால், தான் பதவி விலகியுள்ளதாக வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மலேசிய இந்திய மக்கள் ஹிண்ட்ராப்பின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு, சமத்தவத்திற்காகவும், நீதிக்காகவும், நேர்மைக்காகவும் போராடும் ஹிண்ட்ராப்பிற்கு ஆதரவு அளிப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.