Home இந்தியா சீன எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு பலவீனமாக உள்ளது- நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம்

சீன எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு பலவீனமாக உள்ளது- நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம்

541
0
SHARE
Ad

000_Del6160879டெல்லி, பிப் 25 – சீன எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு பலவீனமாக உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட சீன எல்லையில் சீனா தனது படைப்பலத்தை அதிகரித்துள்ளதுடன் துருப்புகளுக்கான போக்குவரத்து வசதியினையும் மேம்படுத்தியுள்ளது.

ஆனால் இந்தியாவை பொருத்தவரை எல்லைச்சாவடிகள் மற்றும் சாலைகளை அமைப்பதில் பின்தங்கியுள்ளதாக நிலைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

8 ஆண்டுகளுக்கு முன்னர் திட்டமிட்ட எல்லை சாலைகளில் ஒரு சாலை மட்டுமே இதுவரை போடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அந்த குழுவினர், இருப்புப் பாதைகளை அமைக்கும் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

2010 – 2012 காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட 14 இருப்புப் பாதைகள் அமைக்கும் திட்டம் காகித வடிவத்திலேயே இருப்பதாக நிலைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான 55 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தங்களிடம் இல்லை என ரயில்வே அமைச்சகம் கைவிரித்துவிட்டதாக தெரிகிறது.

சீன ராணுவம் அண்மையில் ஊடுருவிய தவ்லக் பெக் உல்டியில் போதிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தாமல் இந்தியா தொடர்ந்து அலச்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ள நிலைக்குழுவினர் இந்த பிரச்சனைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் உரிய விளக்கமளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கியமாக அருணாச்சலப் பிரதேசத்தில் 10 விமானத்தளங்களை நவீனப்படுத்தும் திட்டம் நான்கு ஆண்டுகளாக முடங்கி இருப்பது இந்தியாவின் பாதுக்காப்பிற்கு ஆபத்தாக இருக்கும் என்றும் குழு எச்சரித்துள்ளது.