ஆனால் அப்படத்தில் நடிக்கத்தான் வாய்ப்புக்கிடைத்தது. கதாநாயகி லட்சுமிமேனன் குழந்தைபோன்றவர். பதினொன்றாம் வகுப்பு படிப்பதாக கூறி மானத்தை மயக்குகிறார். படிப்பில் அவர் கொஞ்சம் திணறல் என்று நினைக்கிறேன். ஒன்றரை வருடமாக பதினொன்றாம் வகுப்பு படிப்பதாகவே கூறி வருகிறார்.
குழந்தைத்தனமாக இருந்தாலும் நடிப்பை பொறுத்தவரை சிறப்பாக செய்கிறார். இதுவரை அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றியடைந்தது. அதுபோல் இந்த படமும் வெற்றியடையும். சில இயக்குனர்கள் கேவலமாக கதை சொல்வார்கள். அவர்களில் ஒருவர்தான் கார்த்திக் சுப்புராஜ்.
ஒரு நல்ல கதையை எப்படி சொதப்பலாக சொல்ல முடியும் என்பதை அவரிடம் கதை கேட்டபோது தெரிந்தது. பின்னர் கதையை வாங்கி படித்தபோதுதான் கதையின் வலிமை புரிந்தது. நான் சுட்டிதமான கதாநாயகனாகத்தான் நடித்து வந்தேன் இந்த படத்தில் அது மாறிவிடும்.