Home உலகம் அமெரிக்க, ஜப்பான் , தென் கோரியா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை

அமெரிக்க, ஜப்பான் , தென் கோரியா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை

546
0
SHARE
Ad

Shinzo Abe 300 x 200மார்ச் 23 – நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் வரும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் உலகின் 58 நாடுகள் பங்கேற்கும் அணு பாதுகாப்பு மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும், தென் கொரிய அதிபர் பார்க் ஜியுன் ஹையும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடனான முத்தரப்பு சந்திப்பில் பங்கேற்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டு இருக்கும் எல்லைப் பிரச்சினைகள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா முன்னிலையில் சமாதானப் பேச்சுக்கள் நடைபெறும் என எதிபார்க்கப்படுகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் பதவியேற்ற ஷின்சோ அபேயும், 2013 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பதவியேற்ற பார்க் ஜியுன் ஹையும் நேரில் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.

தென் கொரியாவும், ஜப்பானும் நீண்ட நாட்களாகவே தங்கள் நாடுகளுக்கிடையே உள்ள தீவுகளின் மீதான உரிமைப்  பிரச்சினைகளில் ஈடுபட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

தங்களுடைய ராணுவத்தினர் இரண்டாம் உலகப் போர் நேரங்களில் பயன்படுத்திய செக்ஸ் அடிமைகளுக்கு முதன்முறையாக மன்னிப்பு கேட்பதாக ஜப்பானின் பிரதமர் உறுதியளித்த பின்னரே இந்தப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் மலர்ந்துள்ளது.

அமெரிக்காவும் தங்களுடைய  இரண்டு முக்கிய நட்பு நாடுகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் களைய ஒருங்கிணைந்து பணியாற்ற முயற்சித்து வருகின்றது.