Home உலகம் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானத்துக்கு ஆதரவு – இந்தியா முடிவு!

ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானத்துக்கு ஆதரவு – இந்தியா முடிவு!

503
0
SHARE
Ad

un-human-rights-councilஜெனிவா, மார்ச் 24 – ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தின் மீது இன்று அல்லது நாளை விவாதம் தொடங்கவுள்ளது.

நாளை மறு நாள் வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக மூன்றாவது முறையாக இந்தியா வாக்களிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் மற்றும் ராஜிய நீதியாக முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணை கோரும் வரைவு தீர்மானத்தை  எட்டாவது பட்டியலில் உள்ள பதங்களை மென்மைப்படுத்தும் பேச்சுகளும் நடைபெற்று வருவதாகவும்,

#TamilSchoolmychoice

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 13-வது அரசியல் அமைப்பு திருத்தம் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளின் உதவியுடன் இலங்கை அரசை கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக அதிபர் ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.