மே 10 – “தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், எந்த நோயும் அண்டாது”, என்று வழக்கத்தில் சொல்லுவதுண்டு. அது நிச்சயமாக பச்சை ஆப்பிளுக்குக் கூட உண்மையாகின்றது.
இயற்கை தாய் நமக்கு வழங்கிய மிகவும் அற்புதமான பழங்களில் ஒன்று தான் ஆப்பிள். ஆப்பிள்களில், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைய இருப்பதால், ஒவ்வொருவரும் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆப்பிள்கள் என்று வரும் போது, பல்வேறு வகையான ஆப்பிள்கள் உள்ளன. சிவப்பு வகை ஆப்பிள்கள் மிகவும் பொதுவாக காணப்படுகின்றன மற்றும் பச்சை நிற ஆப்பிள்கள் புளிப்பாக இருந்தாலும், சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும்.
பச்சை ஆப்பிள் தான் நீண்ட காலமாக ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த பழத்தில் தான் இயல்பாகவே பல்வேறு வகையான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
ஆகவே இப்போது அந்த பச்சை ஆப்பிளை சாப்பிடுவதால், கிடைக்கும் உடல்நல நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
உயர் நார்ச்சத்துக்கள்:
உயர் நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது பச்சை ஆப்பிளில் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதால், குடலை சுத்தம் செய்வதிலும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தினை அதிகரிக்கவும் செய்கிறது. எனவே இது தடையற்ற குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.
அதனால் தான் தோலுடன் ஆப்பிளை சாப்பிடுங்கள் என்று எப்போதும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். மேலும் குடல்கள் மற்றும் இதர அமைப்புகள் எந்த அளவில் சுத்தமாக இருக்கின்றனவோ, அந்த அளவில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
ஏராளமான தாதுக்களை கொண்டுள்ளது:
பச்சை ஆப்பிள்கள் ஏராளமான தாதுக்களை கொண்டுள்ளது. தாதுப்பொருட்களான இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் முதலிய சத்துக்கள் மனித சுகாதாரத்திற்கு வேண்டுவன ஆகும். அதிலும் ஆப்பிள்களில் இருக்கும் நுண்ணூட்டச் சத்தான இரும்புச்சத்து இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை உயர்த்த உதவுகிறது.
இதயத்திற்கு ஆரோக்கியமானது:
எடையை குறைக்க முயலுபவர்களுக்கு பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. அதிலும் அத்தகையவர்கள் ஒவ்வொரு நாளும் உணவில் ஒரு ஆப்பிளை சேர்க்க வேண்டும். மேலும் இது இரத்த நாளங்களில் கொழுப்பு சேகரிப்பதை தடுத்து, இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது.
பச்சை ஆப்பிளில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதால், இது கட்டற்ற தீவிர மூலக்கூறுகளால் சரும செல்களுக்கு எதிராக ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது. இதனால் சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைகிறது.
ஆஸ்துமாவைத் தடுக்கிறது:
வழக்கமாக ஆப்பிள் பழச்சாற்றை குடிப்பதால், மிக நுண்ணிய உணர்வு நிலை ஒவ்வாமை நோயான ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பைத் தடுக்க முடியும்.
நீரிழிவு நோயைத் தடுக்கிறது:
ஆப்பிள்கள் நீரிழிவு நோயை தடுக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் தினமும் ஆப்பிள் உண்பதென்பது அவசியமாகிறது. வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்தவையாகும் பச்சை ஆப்பிள்களில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துக் காணப்படுவதால், இது கட்டற்ற தீவிர மூலகூறுகளால் சரும செல்களுக்கு எதிராக ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுவதோடு, இது சருமத்தை பிரகாசிக்கவும் உதவுகிறது.