Home நாடு தெலுக் இந்தான் இடைத் தேர்தல் : ஜசெக டயானா சோஃப்யாவை களமிறக்குகின்றது

தெலுக் இந்தான் இடைத் தேர்தல் : ஜசெக டயானா சோஃப்யாவை களமிறக்குகின்றது

633
0
SHARE
Ad

Dyana Sofya Mohd Daud 2013தெலுக் இந்தான், மே 18 – எதிர்வரும் மே 31ஆம் நாள் நடைபெறவிருக்கும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட ஜசெக டயானா சோப்யா முகமட் டாவுட் என்பவரைத் தேர்வு செய்துள்ளது.

சீன வாக்காளர்களை அதிகமாகக் கொண்ட தெலுக் இந்தான் தொகுதியில் – ஓர் இடைத் தேர்தலில் – ஒரு மலாய் வேட்பாளரைக் களமிறக்கும் சரித்திரப் பிரசித்தி பெற்ற முடிவை இதன் மூலம் ஜசெக செய்துள்ளது.

இடைத் தேர்தலை முன்னிட்டு ஜசெகவின் இடைத் தேர்தல் நடவடிக்கை அறை நேற்று சனிக்கிழமையன்று இங்கு திறக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அந்த நிகழ்வுக்கு வருகை தந்த ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், கேலாங் பாத்தா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங்கின் அரசியல் செயலாளராகப் பணியாற்றும் டயானா சோப்யா (வயது 27) தெலுக் இந்தான் தொகுதி இடைத் தேர்தலில் ஜசெக வேட்பாளராகப் போட்டியிடுவார் என அறிவித்தார்.

டயானா ஈப்போவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுக் இந்தான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சீ லியோங் பெங் (வயது 48) புற்றுநோயால் கடந்த மே 1இல் காலமானார்.

கடந்தாண்டில் நடைபெற்ற 13ஆவது பொதுத் தேர்தலில் ஜசெகவின் சீ தேசிய முன்னணி (தே‘) வேட்பாளர் டத்தோ மா சீவ் கியோங், சுயேச்சை வேட்பாளர் மோரலிங்கம் ஆகியோரை விட 7,313 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

தெலுக் இந்தான் இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் மே 19இல் நடைபெறும். வாக்களிப்பு மே 31இல் நடைபெறும்.