சாவோ பாவ்லோ, ஜூன் 12 – உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் உலகக் கிண்ண காற்பந்து போட்டி 2014 இன்று வியாழக்கிழமை தொடங்குகின்றது.
பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள முதல் ஆட்டமான குழு ஏ பிரிவில், பிரேசில் – கொரேசியா அணிகள் மோதுகின்றன.
இதனிடையே, நேற்று சாவோ பாவ்லோ மைதானத்தில் அதற்கான அனைத்து பாதுகாப்பு ஒத்திகைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஒத்திகையில் 20-கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் நூற்றுக்கும் அதிகமான தீயணைப்புப் படை வீரர்களும் இந்த ஒத்திகை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
போட்டி நடைபெறும் போது பாதுகாப்பிற்காக சுமார் 6000 -த்திற்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் லட்சக்கணக்கான காவல்துறையினர் நகர் முழுவதும் வலம் வந்து தகுந்த பாதுகாப்பு பணிகளை செய்யவுள்ளனர் என ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
(மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இராணுவ வாகனத்தில் பாதுகாப்பிற்கு நிற்கும் வீரர்கள்)
(சாலையில் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பிற்கு நிற்கும் இராணுவ வீரர்)
(மைதானத்திற்குள் பாதுகாப்பிற்கு நிற்கும் இராணுவ வீரர்கள்)
இன்றைய ஆட்டம்:
பிரேசில் – கொரேசியா (குழு ஏ)
பிரேசில் நேரப்படி : 12 ஜூன், வியாழக்கிழமை (மாலை 5 மணி)
மலேசிய நேரப்படி: 13 ஜூன், வெள்ளிக்கிழமை (அதிகாலை 4 மணி)
(பிரேசில் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்)
(கொரேசியா அணி வீரர்கள் உடற்பயிற்சி செய்கின்றனர்)
படங்கள்:EPA