Home கலை உலகம் அனுஷ்காவுக்கு சுளுக்கு : படப்பிடிப்பு ரத்து!

அனுஷ்காவுக்கு சுளுக்கு : படப்பிடிப்பு ரத்து!

600
0
SHARE
Ad

Anushka-சென்னை, ஜூன் 12 – ருத்ரமாதேவி படத்தில் சண்டைக்காட்சியில் நடித்த போது அனுஷ்காவுக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தெலுங்கில் ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ என இரு சரித்திரப் படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா.

இந்த இரு படங்களுமே தமிழிலும் வெளியாகவிருக்கின்றன. ‘ருத்ரமாதேவி’யில் ராணியாக நடிக்கும் அனுஷ்கா, வாள் சண்டை, குதிரை சவாரி காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. இதற்கான பயிற்சிகளை ஒரு மாதத்தில் கற்றுக் கொண்டார்.

Anushka Latest Stillsதனித்தனி சண்டை நடிகர்கள் இதற்காக அவருக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். ருத்ரமாதேவி படப்பிடிப்பு நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனுஷ்கா பங்கேற்ற வாள் சண்டைக் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. கொஞ்சம் கடினமான சண்டைக் காட்சி அது.

#TamilSchoolmychoice

ஒரு கட்டத்தில் அனுஷ்காவுக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டுவிட்டது. மிகுந்த வலியால் அவதிப்பட்ட அவர், தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இப்போது ஓய்வு எடுத்து வரும் அனுஷ்கா, தினமும் புத்தூர் தைலம் தேய்த்து சிகிச்சை பெற்று வருகிறாராம். இதனால் ரஜினி, அஜீத் படங்களில் நடிக்க அவர் கொடுத்த தேதிகள் தள்ளிப் போய் உள்ளதாம்.