Home நாடு “நான் சிறை சென்றாலும் அடுத்த தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றி பெறும்” – அன்வார் கூறுகின்றார்

“நான் சிறை சென்றாலும் அடுத்த தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றி பெறும்” – அன்வார் கூறுகின்றார்

665
0
SHARE
Ad

Anwar-feature---4கோலாலம்பூர், ஜூன் 14 – கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிக் கோட்டை மிக நெருங்கி வந்த எதிர்க்கட்சிகளின் மக்கள் கூட்டணியால் அடுத்த தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்று எதிர்க்கட்சித்  தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தலைநகரில்  எதிர்க்கட்சி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒன்று கூடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

37 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 107 சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட இந்த மூன்று  நாள் சந்திப்பு நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவு  பெறுகிறது.

#TamilSchoolmychoice

இன்று சனிக்கிழமை இதில்  சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட பிகேஆர் கட்சியின் ஆலோசகருமான அன்வார் இப்ராகிம் மக்கள் கூட்டணியின் எதிர் காலம் குறித்தும் அடுத்த பொதுத் தேர்தலின் சவால்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

“மக்கள் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைப்பதை இலக்காக கொண்டிருக்கிறது.  இந்த இலக்கை அடைவதற்கு மக்கள் கூட்டணி தொண்டர்கள் ஓரணியில் நின்று பாடுபட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

“அப்படியே நான் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டாலும் மக்கள் கூட்டணி தொடர்ந்து வலுவுடன் நிலைத்திருக்கும். அடுத்த  பொதுத் தேர்தலில் மக்கள் கூட்டணி மத்திய அரசாங்கத்தை அமைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் கூட்டணி  52 விழுக்காடு  வாக்குகளை பெற்று ஏறத்தாழ அரசாங்கத்தை அமைக்கும் நிலையில் இருந்த்து என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, வரும்  பொதுத் தேர்தலில் மக்கள் கூட்டணியால் மத்திய அரசாங்கத்தை அமைக்க முடியாததற்கு எந்த காரணமும் இல்லை  என்று அவர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.

மக்கள் கூட்டணி இந்த இலக்கை அடைவதற்கு அதன்  உறுப்புக் கட்சிகளின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு நின்று செயலாற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.