Home இந்தியா வலிமையான இந்தியாவால் அண்டை நாடுகளுக்கு நன்மை – மோடி

வலிமையான இந்தியாவால் அண்டை நாடுகளுக்கு நன்மை – மோடி

515
0
SHARE
Ad

MODIதிம்பு, ஜூன் 17 – வலிமையான இந்தியாவால் அண்டை நாடுகளுக்கு நன்மை  கிடைக்கும் என பூடான் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி  உறுதி அளித்தார். இரண்டு நாள் பயணமாக பூடான் சென்ற மோடி,  அந்நாட்டின் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் நேற்று பேசியதாவது,

“வலிமையான பூடானால் இந்தியாவுக்கு மிகச் சிறந்த பலன்  கிடைக்கும். அதேபோல் வலிமையான இந்தியா உருவாகும்போது, இந்த  மண்டலத்தில் உள்ள அனைத்து நாடுகளும், குறிப்பாக சார்க் நாடுகள்  பலன்பெறும்.

இந்தியா வலிமையான நாடாக மாற வேண்டியது, அதன்  மக்களுக்கு மட்டுமல்லாமல், அண்டை நாட்டு மக்களுக்கும்  தேவையான ஒன்றாகும். அண்டை நாடுகளுடன் நட்புடன் இருக்கவே  இந்தியா எப்போதும் விரும்புகிறது.

#TamilSchoolmychoice

அதனால்தான் எனது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அனைத்து சார்க் நாட்டு  தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தேன். அத்தலைவர்கள் கலந்து  கொண்டது நிகழ்ச்சிக்கு தனிப்பெருமையை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில்  பங்கேற்ற பூடான் பிரதமருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்தியாவில் ஆட்சி மாறிவிட்டது. ஆனால் அதனால் நம்முடைய  உறவில் எந்த மாற்றமும் இல்லை. இது ஆட்சிகளுக்கு இடையேயான  உறவு அல்ல. நாடுகளுக்கு இடையேயான உறவாகும். முந்தைய  அரசால் பூடானுக்கு அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும்  முழுமையாக நிறைவேற்றுவோம்.

narendra-mod-bhutanமன்னராட்சியிலிருந்து  மக்களாட்சிக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு பூடான் மாறியது. தற்போது  மிகச் சிறந்த ஜனநாயக நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இமயமலை நம் நாட்டைப் பிரிக்கிறது என்று கூறுகிறார்கள். அது தவறு.  இமயமலை நம்மை இணைக்கிறது.

இரு நாடுகளும் பல்வேறு  துறைகளில் இணைந்து பணியாற்றிட வேண்டும். குறிப்பாக பாதுகாப்புத்  துறையில். நாம் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  சுற்றுலா துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதை சரியாக  பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இமயமலை நம் இரு நாட்டுக்கும்  பொதுவானதாகும். இமாலயன் படிப்புகளுக்காக திறந்த நிலைப்  பல்கலைக் கழகத்தை இந்தியாவில் திறக்க உள்ளோம். இரு நாடுகளும்  இது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும்.

அதே போல்  பூடான், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையே  விளையாட்டுப் போட்டிகளை நடத்திட வேண்டும்” என மோடி  பேசினார். மோடியின் உற்சாக பேச்சுக்கு பூடான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி பாராட்டு  தெரிவித்தனர்.