2ஜி வழக்கில் தன்னையும் சாட்சியாக விசாரிக்க வேண்டும் எனக் கோரி ராசா மனு அளித்திருந்தார். அவரது மனு ஏற்கப்பட்டதை அடுத்து, நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், இன்று அவர் சாட்சியம் அளித்தார்.
சாட்சியாக அவர் தெரிவித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. நாளையும் ராசா சாட்சியளிக்க உள்ளார். கோடை விடுமுறையை அடுத்து சுமார் 45 நாட்களுக்குப் பிறகு 2ஜி சிறப்பு நீதிமன்றம் இன்று கூடியது குறிப்பிடத்தக்கது.
Comments