Home வணிகம்/தொழில் நுட்பம் உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளால் மாக்காவ் சூதாட்ட மையங்களில் வருமானம் சரிவு

உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளால் மாக்காவ் சூதாட்ட மையங்களில் வருமானம் சரிவு

757
0
SHARE
Ad

670px-casino1பெய்ஜிங், ஜூலை 2 – முன்னாள் போர்ச்சுக்கல் காலணியான மக்காவ் தீவு தற்போது சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. இந்தத் தீவு சூதாட்ட மையங்களுக்கு புகழ்பெற்ற மையமாக விளங்கி வருகிறது.

உலகிலேயே சூதாட்ட மையங்களின் மூலம் அதிகமான வருமானம் பெறும் பிரதேசமாக மாக்காவ் திகழ்ந்து வருகிறது. இரண்டாவது நிலையில் அமெரிக்காவின் லாஸ்வெகாஸ் நகரம் திகழ்கிறது.

கடந்த ஜூன் மாதம் மத்தியில் தொடங்கி நடைபெற்று வரும் உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளினால் மாக்காவ் சூதாட்ட மையங்களின் வருமானம் கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

கடந்த சில வருடங்களாக இந்த சூதாட்ட மையங்களின் வருமான உயர்ந்த நிலையில் கடந்த மாதம் 3.7 சதவீதம் வருமானம் சரிவு கண்டு 3.4 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் மட்டுமே கடந்த மாதம் மாக்காவ் தீவுக்கு கிடைத்தது.

உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளை உலகெங்கும் உள்ள மக்கள் கண்டுகளித்து வருகிறார்கள் என்பது இருக்க ஏராளமானோர் காற்பந்து போட்டிகளை அடிப்படையாக வைத்து நடைபெறும் சூதாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சில நாடுகளில் காற்பந்து விளையட்டுகளை அடிப்படையாகக் கொண்ட சூதாட்டங்கள் அதிகாரப்பூர்வமாக நடைபெற்று வந்தாலும் பல நாடுகளில் இந்த சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், கள்ளச் சந்தையில் காற்பந்து போட்டிகளின் மீதான சூதாட்டங்களுக்கு அமோகமான வரவேற்பு இருந்து வருகிறது.

இதன் காரணமாகவே மாக்காவ் போன்ற சூதாட்ட மையங்களுக்கு படையெடுக்கும் சூதாட்டக்காரர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. மற்றொரு காரணம் சீனா அரசாங்கத்தின் அதிபர் ஷீ சின் பெங் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் நடவடிக்கைகளை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் சீனாவிலிருந்து மாக்காவ் சூதாட்ட மையங்களுக்கு வருபவரின் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.