Home உலகம் அணு ஆயுதங்களைக் கைப்பற்றிய ஈராக் தீவிரவாதிகள் – ஐநா அதிர்ச்சி!

அணு ஆயுதங்களைக் கைப்பற்றிய ஈராக் தீவிரவாதிகள் – ஐநா அதிர்ச்சி!

595
0
SHARE
Ad

iraq-fightersபாக்தாத், ஜூலை 12 – ஈராக்கில் சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் நிகழ்த்தி வரும் உள்நாட்டுப் போரில் தற்போது உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அந்நாட்டின் அணு ஆயுத மூலப்பொருளான யுரேனியத்தை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகின்றது.

அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தம் முக்கிய மூலப் பொருளான யுரேனியத்தை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியிருப்பதாக ஐநா சபையிடம் ஈராக் திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளது.

இந்த புகாரினை ஐநா சபைக்கான ஈராக்கின் தூதர் முகமது அலி அல்ஹாக்கிம், கடந்த 8-ந் தேதியன்று ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூனிடம் கடிதம் மூலம் சமர்பித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அந்த கடித்ததில், “மொசூல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றிய போது, அங்கு பல்கலைக் கழகத்தில் அறிவியல் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டு இருந்த அணு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் 40 கிலோ யுரேனியத்தை கைப்பற்றிவிட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், தீவிரவாதிகள் கைப்பற்றிய யுரேனியம் குறைந்த அளவுதான். எனினும், அதனை வேறு பொருட்களுடன் கலந்து ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்கள் வைத்திருப்பது தொடர்பாக ஈராக் முன்னாள் ஆட்சியாளர் சதாம் உசேன் மீது அமெரிக்கா குற்றம் சாட்டி போது, ஈராக் அதனை மறுத்தது குறிப்பிடத்தக்கது.