Home இந்தியா இலங்கை போர்க் குற்றம்: ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு இந்தியா விசா வழங்க வேண்டும் – ராமதாஸ்

இலங்கை போர்க் குற்றம்: ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு இந்தியா விசா வழங்க வேண்டும் – ராமதாஸ்

646
0
SHARE
Ad

ramadossசென்னை, ஜூலை 24 – இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா. குழுவுக்கு இந்தியா விசா வழங்க மத்திய அரசு முன் வரவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இடைவிடாத முயற்சி காரணமாக இலங்கை மீது, ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு ஆணையிடுவதற்கான தீர்மானம் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையில் 16 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஐ.நா. அதிகாரி சாண்ட்ரா பெய்தாஸ் தலைமையிலான இந்தக்குழு இலங்கையில் விசாரணை நடத்த அனுமதியளிக்க முடியாது என அந்நாட்டு அதிபர் ராஜபட்சே அறிவித்துவிட்டார்.

ramadosss (1)இந்த நிலையில், ஐ.நா. விசாரணையை சென்னையில் நடத்த வேண்டும் என்று பல வாரங்களுக்கு முன்பே மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை இந்தியாவில் நடத்தும் நோக்குடன் ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக் குழுவினருக்கு விசா வேண்டி ஐ.நா. மனித உரிமை ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், அந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் அது இந்தியாவின் மனித உரிமை வரலாற்றில் மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தி விடும்.

ஒரு காலத்தில் உலகில் எந்த மூலையில் மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் அதற்கு எதிரான முதல் குரல் இந்தியாவிலிருந்துதான் ஒலிக்கும்.

ramadosssஆகையால், இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தலைமையிலான குழு ஏற்கனவே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளது.

அதையும், உலகத் தமிழர்களின் உணர்வையும் மதித்து போர்க்குற்ற விசாரணையை இந்தியாவில் நடத்த அனுமதிக்க வேண்டும். அதற்கு வசதியாக ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக் குழுவினருக்கு விசா வழங்க நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முன்வர வேண்டும்” என்றார் ராமதாஸ்.