Home வணிகம்/தொழில் நுட்பம் புகுஷிமாவில் இருந்து உலக நாடுகளுக்கு மீண்டும் அரிசி ஏற்றுமதி! 

புகுஷிமாவில் இருந்து உலக நாடுகளுக்கு மீண்டும் அரிசி ஏற்றுமதி! 

656
0
SHARE
Ad

rice_inடோக்கியோ, ஆகஸ்ட் 21 – ஜப்பான் அரசு புகுஷிமா பகுதிகளில் இருந்து மீண்டும் உலக நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியை தொடங்க இருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை மற்ற நாடுகளில் இருந்து பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டிற்கு முன்பு வரை ஜப்பானின் வேளாண் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகித்த புகுஷிமா, சுனாமிப் பேரலைகளின் தாக்குதல் காரணமாக அதன் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டது.

அணுசக்திக்குப் பயன்படும் மூலக்கூறுகள் கதிர்வீச்சினை வெளியிட்டன. இதன் காரணமாக, புகுஷிமாவில் விளைந்த அரிசியை ஏற்றுமதி செய்யவது தடை செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

தற்போது அந்த தடை நீக்கப்பட்டு உலக நாடுகளுக்கான அரிசி ஏற்றுமதி மீண்டும் தொடங்க உள்ளது. இது குறித்து ஜப்பானில் வேளாண் பொருள்களை மொத்தமாக விற்பனை செய்யும் “ஜென்-நோ’ அமைப்பு கூறியுள்ளதாவது:-

White+rice“புகுஷிமா பகுதியில் தற்போது விளைந்த அரிசிகளில் கதிர்வீச்சு பாதிப்பு உள்ளதா என ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் அந்த பகுதியின் விளை நிலங்களில் கதிர்வீச்சு பாதிப்பு முற்றிலும் நீங்கி விட்டதாக ஆராய்ச்சி அமைப்புகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜப்பானின் வேளாண் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகித்த புகுஷிமாவின் அரிசி ஏற்றுமதி மீண்டும் தொடங்குகிறது” என அறிவித்துள்ளது. இதன் தொடக்கமாக சிங்கப்பூருக்கு 300 கிலோ அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.