வாஷிங்டன், செப்டம்பர் 30 – அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, நியூயார்க் நகரிலிருந்து வாஷிங்டனை வந்தடைந்தார்.
பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பிற்கு பிறகு அதிபர் ஒபாமா, பிரதமர் மோடிக்கு விருந்தளித்து கௌரவிக்கிறார்.
முன்னதாக நியூயார்க் நகரிலிருந்து வாஷிங்டன்னுக்கு வந்த பிரதமர் மோடி, அவர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிளேர் ஹவுஸ் சென்றார். அப்போது வழி எங்கும் திரண்டிருந்த வாஷிங்டன் வாழ் இந்தியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.