Home இந்தியா பெங்களூர் சிறையில் ஜெயலலிதா, வீட்டுச் சிறையில் கருணாநிதி!

பெங்களூர் சிறையில் ஜெயலலிதா, வீட்டுச் சிறையில் கருணாநிதி!

460
0
SHARE
Ad

jayalalithaa vs karunaanithiசென்னை, அக்டோபர் 3 – ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருவதால், ‘எந்த நிகழ்ச்சிகளிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம்’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, தேசிய பாதுகாப்பு படை அதிகாரி ஆலோசனை கூறியுள்ளார்.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை நேற்று முன்தினம், தேசிய பாதுகாப்பு படை அதிகாரி சந்தித்து பேசினார். அப்போது அவர் கருணாநிதியிடம் கூறியதாவது,

“’தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. அதனால், நிலைமை சீராகும் வரை, நீங்கள் பொது நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். வெளியே வர வேண்டாம்” என, கேட்டுக் கொண்டதாக, தி.மு.க., வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், கருணாநிதிக்கு அளிக்கப்படும் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி)., பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அவர் பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பிரச்சனை காரணமாக, கடந்த ஆறு நாட்களாக, கருணாநிதி அறிவாலயம் வரவில்லை. கோபாலபுரம் வீட்டில் தான் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு தான், அவர், சி.ஐ.டி., காலனி வீட்டுக்கு போனார் என்றும், தி.மு.க., தரப்பில் கூறுகின்றனர்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் மேலும் கூறியதாவது, “கடந்த, 25-ம் தேதி நடந்த கறுப்புச் சட்டை போராட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டதோடு சரி.

அதன்பின் அவர், எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. ஆறு நாட்களாக அண்ணா அறிவாலயம் கூட செல்லாமல், கோபாலபுரம் வீட்டில் தான் இருந்தார்.

அவரை அவரது துணைவியார் ராஜாத்தி நேற்று முன்தினம் மதியம் கோபாலபுரம் வந்து பார்த்துச் சென்றுள்ளார். நேற்று மதியம் ராஜாத்தியும், கனிமொழியும், கருணாநிதிக்கான மதிய உணவை சி.ஐ.டி., காலனி வீட்டில் இருந்து எடுத்து வந்தனர்.

நேற்று இரவு தான் அவர், கோபாலபுரம் வீட்டை விட்டே வெளியே வந்து, சி.ஐ.டி., காலனி வீட்டுக்கு சென்றார். ஜெயலலிதா ஜாமின் வழக்கில் முடிவு தெரியும் வரை இந்த சூழ்நிலை நீடிக்கலாம் என தி.மு.க, வட்டாரம் தெரிவித்தது.