நைஜீரியாவில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த, ஆயுதப் போராட்டம் நடத்தி வரும், போக்கோ ஹரம் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் மாதம் 14–ம் தேதி, போர்னோ மாகாணத்தில் உள்ள ஒரு உறைவிடப் பள்ளியில், கல்வி பயின்று வந்த 276 மாணவிகளைப் பிணைக் கைதிகளாக கடத்திச் சென்றனர்.
உலக நாடுகளை இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நைஜீரிய இராணுவத்தால் அவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவர்களை மீட்க அமெரிக்கா, தனது இராணுவத்தை அனுப்பியது. எனினும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
அதன் மூலம் கடத்தப்பட்ட 276 மாணவிகளும் பத்திரமாக மீட்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் குட்லக் ஜொனாத்தனின் முதன்மை செயலாளர் ஹசன் டுக்கூர் தெரிவித்துள்ளார்.
இதனை உறுதிபடுத்தும் வகையில், இராணுவத்தினரின் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த தாக்குதல்கள் குறைக்கப்படும் என போக்கோ ஹரம் தீவிரவாதிகள் உறுதியளித்துள்ளனர்.