Home நாடு விவேகானந்தர் ஆசிரம விவகாரம்: மஇகா இளைஞர் பிரிவுடன் கைகோர்த்தது ஹிண்ட்ராப்

விவேகானந்தர் ஆசிரம விவகாரம்: மஇகா இளைஞர் பிரிவுடன் கைகோர்த்தது ஹிண்ட்ராப்

574
0
SHARE
Ad

Waytha 440 x 215கோலாலம்பூர், நவம்பர் 1 – 110 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தர் ஆசிரமத்தை காக்கும் பொருட்டு மஇகா இளைஞர் பிரிவுடன் கை கோர்க்கத் தயாராகியுள்ளது ஹிண்ட்ராப்.

மஇகாவும், ஹிண்ட்ராப்பும் எப்போதும் இரு துருவங்களாக, எதிர்முனைகளில் இருந்துதான் அரசியல், சமுதாயப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளன.

ஆனால் இந்த முறை விவேகானந்தர் ஆசிரமத்தைக் காப்பாற்றும் நோக்கில், பல்வேறு அரசு சார்பற்ற இந்திய அமைப்புகளுடன் இணைந்து ஹிண்ட்ராப்பும் மஇகா இளைஞர் பிரிவும் ஒரு குழுவை இதற்காக அமைத்துள்ளன.

#TamilSchoolmychoice

விவேகானந்தர் ஆசிரமத்தை காக்கும் விதமாக யுனெஸ்கோ அமைப்பிடம் நாளை திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் கோரிக்கை மனு (memorandum) ஒன்றை அளிக்க இருப்பதாக ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி (படம்) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“இது மதம் அல்லது இனம் சார்ந்த விவகாரம் அல்ல. இது அனைத்து மலேசியர்களும் சம்பந்தப்பட்ட விஷயம். விவேகானந்தர் ஆசிரமம் பாரம்பரியமும் உயர்ந்த கலாச்சாரமும் கொண்ட சின்னமாகும்,” என வேதமூர்த்தி கூறியுள்ளார்.

விவேகானந்தர் ஆசிரமத்தை காக்கும் பொருட்டு நேற்று சனிக்கிழமை பிரிக்பீல்ட்சில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஆசிரமத்தைக் காப்பாற்றும் தங்களது முயற்சிக்கு அனைத்துலக அளவில் இந்திய அரசு சார்பற்ற இயக்கங்கள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“யுனெஸ்கோவிடம் அளிக்கப்படும் அதே கோரிக்கை மனு சுற்றுலா துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் நஸ்ரி அசிசிடமும் அளிக்கப்படும். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் செனட்டர் சந்திரமோகன் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவார்,” என்றும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.