Home தொழில் நுட்பம் சீனாவில் ஆப்பிள் கருவிகளை பாதிக்கும் மால்வேர்!  

சீனாவில் ஆப்பிள் கருவிகளை பாதிக்கும் மால்வேர்!  

609
0
SHARE
Ad

chinaபெய்ஜிங், நவம்பர் 7 – சீனாவில் பயனர்களின் ஐபோன் மற்றும் ஐபேட்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘மால்வேர்’ (Malware) ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் கருவிகளை பயன்படுத்தும் பயனர்களின் தகவல்கள் தொழில்முறைத் தகவல் திருடர்களால் திருடப்படுகின்றன.

சீனாவில் ஆப்பிள் கருவிகளான ஐபோன், ஐபேட் மற்றும் மேக் கணினிகளில் சமீப காலமாக குறிப்பிட்ட நிரல்களால் பெரும் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கின.

இந்த மால்வேர்கள் பயனர்களின் தகவல்களை திருடுவது மட்டும் அல்லாமல், பாதிப்புகளை ஏற்படுத்தும் செயலிகளை, கருவிகளில் பதிவேற்றம் செய்து விடுகின்றன.

#TamilSchoolmychoice

‘வயர்லர்கர்’ (WireLurker) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மால்வேர், சீனப் பயனர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்த புதிய மால்வேர் பற்றி பலோ அல்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் நிபுணர்கள் கூறுகையில், “இந்த புதிய மால்வேர்கள், இதுவரை ஆப்பிள் கருவிகளில் காணப்படாத ஒன்றாக உள்ளது.

மேக் கணினிகளில் இருந்து கைப்பேசி இயங்குதளங்களுக்கு எளிதாக மாறிக் கொள்ளும் தன்மை கொண்டதாக இருப்பதால் விரைவாக அனைத்து கருவிகளிலும் பரவி வருகின்றன” என்று கூறியுள்ளனர்.

இது பற்றி ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளதாவது:- “சீனப் பயனர்களைக் குறிவைத்து, உருவாக்கப்பட்டுள்ள இந்த மால்வேர் பற்றி ஆராய்ந்து வருகின்றோம்.  அங்கீகரிக்கப்பட்ட தளங்களில் இவை பரவா வண்ணம் தடுக்கப்பட்டுள்ளது”.

“பயனர்கள் அங்கீகரிக்கப்படாத தளங்களில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்யாமல் இருதால் மட்டுமே மால்வேர்களை தடுக்க முடியும்” என்று கூறியுள்ளது.

சீனாவில் பெரும் மதிப்பு உள்ள ஆப்பிள் வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இத்தகைய மால்வேர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் வட்டாரங்கள் கூறுகின்றன.