இந்தப் பட்டியல் படி ரஜினி, அஜித்தை விட விஜய் முன்னணியில் இருக்கிறார். ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் சல்மான் கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமிதாப் பச்சன் இரண்டாம் இடத்தையும், ஷாரூக் கான் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதில் தமிழ்நாட்டுப் பிரபலங்கள் என்று பார்க்கும்போது ஏ.ஆர்.ரஹ்மான் 13-வது இடத்தில் இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் 39-வது இடத்தில் உள்ளார்.
விஜய் 41-வது இடத்திலும், ரஜினி 45-வது இடத்திலும், அஜித் 51-வது இடத்திலும் உள்ளனர். இப்பட்டியலில் தனுஷ் 78-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.