Home கலை உலகம் ரஜினி, அஜித்தை முந்திய விஜய்!

ரஜினி, அஜித்தை முந்திய விஜய்!

542
0
SHARE
Ad

Thala-Thalapathayபுதுடெல்லி, டிசம்பர் 17 – ஃபோர்ப்ஸ் பத்திரிகை இந்தியாவின் 100 பிரபலங்களைப் பட்டியல் செய்துள்ளது. பிரபலங்களின் சம்பளம் மற்றும் அவர்கள் எந்த அளவு பிரபலமாக இருக்கிறார்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் விஜய் 41-வது இடத்தில் இருக்கிறார்.

இந்தப் பட்டியல் படி ரஜினி, அஜித்தை விட விஜய் முன்னணியில் இருக்கிறார். ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் சல்மான் கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமிதாப் பச்சன் இரண்டாம் இடத்தையும், ஷாரூக் கான் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதில் தமிழ்நாட்டுப் பிரபலங்கள் என்று பார்க்கும்போது ஏ.ஆர்.ரஹ்மான் 13-வது இடத்தில் இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் 39-வது இடத்தில் உள்ளார்.

#TamilSchoolmychoice

விஜய் 41-வது இடத்திலும், ரஜினி 45-வது இடத்திலும், அஜித் 51-வது இடத்திலும் உள்ளனர். இப்பட்டியலில் தனுஷ் 78-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.