Home இந்தியா தீவிரவாத தாக்குதலில் தப்புவது எப்படி? பள்ளிகளில் விழிப்புணர்வு பயிற்சி – ராஜ்நாத் சிங்

தீவிரவாத தாக்குதலில் தப்புவது எப்படி? பள்ளிகளில் விழிப்புணர்வு பயிற்சி – ராஜ்நாத் சிங்

582
0
SHARE
Ad

rajnath-singhபுதுடெல்லி, டிசம்பர் 18 – பாகிஸ்தான் ராணுவப் பள்ளி தாக்குதலை தொடர்ந்து, மாநில அரசுகள் அனைத்தும் விழிப்புடன் இருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது.

இது தொடர்பாக, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி,  ராஜ்நாத் சிங் கூறுகையில், “தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால், எப்படி தற்காத்துக் கொள்வது, எப்படி தகவல் தெரிவிப்பது என்பது உள்ளிட்ட தற்காப்பு விழிப்புணர்வு நெறிமுறைகள், பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன”.

#TamilSchoolmychoice

“முன்னதாக, 2008 நவம்பர் 26-ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுபோன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன”.

“தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு புதிய சுற்றறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சில பள்ளிகளுக்கு சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள், போலீஸ் மற்றும் நிர்வாகத்துடன் ஒத்துழைத்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்”.

“டெல்லியில் பள்ளிகள் உள்ள இடங்களைச் சுற்றி, போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி முதல்வர்களுடன், காவல்நிலையங்கள் தொடர்பில் இருக்கும் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.