Home நாடு அரசியலில் கையேந்துவது அம்னோதான் – ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் சாடல்!

அரசியலில் கையேந்துவது அம்னோதான் – ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் சாடல்!

730
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 23 – அரசியலில் மலாய்க்காரர்கள் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் மகாதீர் கூறிய கருத்தை ஏற்க இயலாது என ஐசெக தெரிவித்துள்ளது.

மகாதீரின் கூற்று வலுவானதொரு பொருளாதாரக் கொள்கையை வகுக்க முடியாத அம்னோவின் இயலாமையை மூடி மறைப்பதாக உள்ளது என ஐசெகவின் சைரில் கிர் ஜொகாரி குற்றம்சாட்டியுள்ளார்.

Zairil-khir-johari
சைரில் கிர் ஜொகாரி

நாடாளுமன்ற உறுப்பினருமான சைரில் அம்னோவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான கிர் ஜொகாரியின் புதல்வராவார்.

#TamilSchoolmychoice

“இன்று பிரதமர் பதவி முதல் முக்கியமான அரசுப் பதவிகள் அனைத்திலும் மலாய்க்காரர்களே உள்ளனர். 13 மாநிலங்களில் 12 மாநிலங்களுக்கு மலாய்க்காரர்களே மந்திரி பெசார்களாகவும் பதவி வகிக்கின்றனர். நீதித்துறை, காவல்துறை, ராணுவம் மற்றும் பொதுத்துறை ஆகியவற்றில் கூட மலாய்க்காரர்களின் ஆதிக்கம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது,” என்றார் பினாங்கு, புக்கிட் பெண்டாரா நாடாளுமன்ற உறுப்பினரான சைரில்.

கடந்த பொதுத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக அரசியலில் கையேந்தும் நிலை அம்னோவுக்குதான் ஏற்பட்டுள்ளது என்றார் அவர். இதன் காரணமாகவே வலதுசாரி குழுக்களான பெர்காசா மற்றும் இஸ்மா ஆகியவற்றின் பக்கம் அம்னோ சாய்வதாக சைரில் விமர்சித்துள்ளார்.

“இழந்து வரும் ஆதரவு காரணமாக ஏற்பட்டுள்ள பயத்தினாலேயே அம்னோவும் துன் மகாதீரும் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை,” என்று சைரில் மேலும் தெரிவித்துள்ளார்.