Home நாடு இந்திய கிராமங்களை ஒய்ட் – ஃபை தொழில்நுட்பத்தால் இணைக்கலாம் – சத்யா நாதெல்லா!

இந்திய கிராமங்களை ஒய்ட் – ஃபை தொழில்நுட்பத்தால் இணைக்கலாம் – சத்யா நாதெல்லா!

910
0
SHARE
Ad

ms-white-fiபுதுடெல்லி, டிசம்பர் 30 – இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் இணையப் பயன்பாட்டை அதிகப்படுத்த ‘ஒய்ட் – ஃபை’ (White-Fi) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா, இந்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திடம் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நாதெல்லா, கடந்த வெள்ளிக்கிழமை, தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்தார்.

அப்போது இந்தியாவில் மைக்ரோசாப்டின் முதலீடுகள் குறித்தும், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தினார்.  மேலும், ‘வை-ஃபை’ (Wi-Fi) தொழில்நுட்பத்திற்கு ஈடாக வளர்ந்து வரும், ஒய்ட் – ஃபை தொழில்நுட்பத்தை, இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி அவர் எடுத்துரைத்தார்.

#TamilSchoolmychoice

அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டுள்ள இந்த தொழில் நுட்பம் மூலம், இந்திய கிராமங்களையும் இணையத்தால் இணைக்க முடியும் என்று நாதெல்லா கூறியுள்ளார்.

sathya_nathellaceo_00216 எம்.பி இணைய வேகத்தில் 10 கி.மீ அளவிற்கு இணைப்பை, இந்த தொழில்நுட்பம் மூலம் இணைக்க முடியும் என்பதால், இந்தியா போன்ற நாடுகளுக்கு இது மிகுந்த பயனை அளிப்பதாக அமையும் என்று கூறப்படுகின்றது.

இந்திய கிராமப் பகுதிகளுக்கான இணையப் பயன்பாடுகள் குறித்தும்,  இணைப்புகள்  குறித்தும் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள், இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மைக்ரோசாப்ட்டும் இது தொடர்பாக தங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இந்தியாவில் இணைய வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வந்தாலும், பெரும்பாலான கிராமப் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வர்த்தக அமைப்புகளில் அவை முழுமையாக மேம்படுத்தப்பட வில்லை.

அத்தகைய குறைகளை போக்கவே, மோடி தலைமையிலான அரசு ‘டிஜிட்டல் இந்தியா’ (Digital India) திட்டத்தை நிறைவேற்ற ஆயத்தமாகி வருகின்றது.

அந்த திட்டத்தில் பல பில்லியன் டாலர்களை இந்திய அரசு முதலீடு செய்ய இருப்பதால், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய முதலீட்டில் ஆர்வம் காட்டி வருகின்றன.