Home உலகம் “அப்பா திரும்பி வாருங்கள்” – ஏர் ஏசியா விமானியின் மகள் கதறல்! 

“அப்பா திரும்பி வாருங்கள்” – ஏர் ஏசியா விமானியின் மகள் கதறல்! 

490
0
SHARE
Ad

pilot_daughter_003

ஜாகர்த்தா, டிசம்பர் 30 – 162 பேருடன் மாயமாகிவுள்ள  ஏர் ஏசியா QZ8501 விமானம் பற்றிய தகவல்கள் நாளுக்குநாள் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் விமானத்தை ஓட்டிய விமானி இரியான்டோவின் 22-வயது மகள் ஏஞ்சலா, சமூக ஊடகத்தில் தனது தந்தையின் படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

“அப்பா மீண்டும் வீட்டிற்கு வந்து விடுங்கள். எனக்கு நீங்கள் வேண்டும். என் அப்பாவை, திரும்ப கொண்டு வாருங்கள்” என்று ஏஞ்சலா தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த விமானி இரியான்டோவிற்கு  மனைவி மற்றும் பள்ளி செல்லும் 2 மகள்கள் உள்ளனர். குடும்பத்திலும், பணியிடங்களிலும் நன்மதிப்பை பெற்றுள்ள அவர், 6 ஆயிரத்து 100 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.