Home நாடு லீ சியான் விரைவில் குணமடைய நஜிப் பிரார்த்தனை!

லீ சியான் விரைவில் குணமடைய நஜிப் பிரார்த்தனை!

519
0
SHARE
Ad

Najib-Razak-Lee-Hsien-Loongகோலாலம்பூர், பிப்ரவரி 16 – புற்றுநோய்க்காக இன்று சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிற்கு, மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் ஆறுதல் கூறியுள்ளார்.

நேற்று தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் நஜிப் வெளியிட்டுள்ள தகவலில், “என்னுடைய நெருங்கிய நண்பரும், சிங்கப்பூர் பிரதமருமான லீ சியான் லூங்கின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடியவும், அவர் விரைவில் குணமடையவும் எனது பிரார்த்தனைகள்” என்று நஜிப் தெரிவித்துள்ளார்.

லீ சியான் லூங்கிற்கு புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer) (ஆண்களுக்கு விரையில் வரும் ஒரு வகையான புற்றுநோய்) இருப்பது பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது என்றும், இதற்காக அவருக்கு இன்று (திங்கட்கிழமை)அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு புரோஸ்டேட் சுரப்பி அகற்றப்படவுள்ளதாகவும் சிங்கப்பூர் பிரதமர் துறை அலுவலகம் நேற்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.