Home நாடு 2009ஆம் ஆண்டு மத்திய செயலவையே சங்கப் பதிவகத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது – சுப்ரா உறுதி

2009ஆம் ஆண்டு மத்திய செயலவையே சங்கப் பதிவகத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது – சுப்ரா உறுதி

490
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 12 – இன்று நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், சங்கப் பதிவகம் வழங்கிய அங்கீகாரக் கடிதத்தின்படி 2009ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவைதான் அதிகாரபூர்வமானது என்றும் அதன்படிதான் தாங்கள் நடந்து கொண்டு வருகின்றோம் என்றும் அறிவித்தார்.

Dr.-S.-Subramaniamபத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டாக்டர் சுப்ரா, ஒரு சில தரப்பினர் கூறுவதுபோல் கட்சியில் இரண்டு மத்திய செயற்குழுக்கள் இல்லை என்றும், ஒரே ஒரு மத்திய செயற்குழுதான் அதிகாரபூர்வமாக சங்கப் பதிவகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது என்றும் கூறினார்.

“2013ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்சித் தேர்தல்கள் செல்லாது என சங்கப் பதிவகம் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் அந்த ஆண்டின் மத்திய செயலவை மட்டும் எப்படி செயல்பட முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

“2009ஆம் ஆண்டு மத்திய செயலவையினரில் சுமார் 9 பேர் ஏனோ நாங்கள் கூட்டுகின்ற கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. மற்றபடி சங்கப் பதிவகத்தின் அங்கீகாரம் இல்லையென்றால் நாங்கள் ஏன் இந்தக் கூட்டத்தைக் கூட்டி நடவடிக்கைகள் எடுக்கின்றோம்?” என்றும் சுப்ரா விளக்கமளித்தார்.

இன்று நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்தில் தேர்தல் குழுத் தலைவராக மூத்த வழக்கறிஞர் டி.பி.விஜேந்திரன் நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் சுப்ரா அறிவித்துள்ளார்.