Home அவசியம் படிக்க வேண்டியவை விவேகானந்தா ஆசிரம அறங்காவலர்களின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது: குலசேகரன்

விவேகானந்தா ஆசிரம அறங்காவலர்களின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது: குலசேகரன்

568
0
SHARE
Ad

Vivekananda_Ashramகோலாலம்பூர், மார்ச் 22 – விவேகானந்தா ஆசிரமத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்கும் அரசின் பரிந்துரையை ஆசிரம அறங்காவலர்கள் நிராகரித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என ஐசெக நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் (படம்) தெரிவித்துள்ளார்.

இந்த நிராகரிப்பின் மூலம் ஆசிரம பகுதியில் உயர்தரக் குடியிருப்பை கட்டுவதற்கான பணிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

kulasekaranஆசிரமத்தைக் காப்பாற்றுவதற்காக இந்திய சமுதாயம் கையெழுத்து இயக்கம் மற்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பரில் ஆசிரம பகுதியை பார்வையிட்ட சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் முகமட் நஸ்ரி அசிஸ், ஆசிரமத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிப்பதை ஆசிரம அறங்காவலர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

“இந்நிலையில் அரசின் பரிந்துரையை அறங்காவலர்கள் நிராகரித்திருப்பது இந்திய சமுதாயத்தையும், பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதி இந்தியர்களையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது,” என்று குலசேகரன் தெரிவித்துள்ளார்.

விவேகானந்தா ஆசிரமத்தை புராதனச் சின்னமாக அறிவிக்கும் அரசின் பரிந்துரையை அறங்காவலர்கள் ஏற்க மறுத்ததன் பின்னணியில் வர்த்தக ரீதியிலான நோக்கங்கள் இருக்கலாம் என்று எழுந்துள்ள சந்தேகத்தை அவர் சுட்டிக் காட்டினார்.

இத்தகைய தகவல் உண்மையெனில் இதனால் ஆதாயமடையப் போவது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன். இந்த விவகாரத்திற்கு சுமுகமான தீர்வு காணும்படி அமைச்சர் நஸ்ரியிடம் கேட்டுக் கொள்வேன்,” என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரான குலசேகரன் கூறியுள்ளார்.