Home நாடு “மகாதீர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுங்கள்” – நஜிப்புக்கு எதிராக துங்கு ரசாலியும் போர்க்கொடி

“மகாதீர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுங்கள்” – நஜிப்புக்கு எதிராக துங்கு ரசாலியும் போர்க்கொடி

544
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 3 – “முன்னாள் பிரதமர் துன் மகாதீர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பதில் கூற வேண்டிய உரிய தருணம் வந்துவிட்டது. இனியும் காலம் தாமதிக்காமல் பிரதமர் நஜிப் முறையான பதில்களை வழங்க வேண்டும்” என முன்னாள் நிதியமைச்சரும் குவா மூசாங் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி (படம்) நஜிப்புக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

Tengku-Razaleighநேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அம்னோ மூத்த தலைவர்களில் ஒருவரான துங்கு ரசாலி இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான விமர்சனங்களை மகாதீர் நஜிப்புக்கு எதிராகத் தனது வலைப் பதிவில் நேற்று வெளியிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

“அவரது தலைமைத்துவத்தைச் சுற்றி எழுந்திருக்கும் பல்வேறு குறைகூறல்களுக்கும் இன்னும் தீர்வும் விடையும் கிடைக்கவில்லை என்பதால் அவருக்கு ஆதரவு கிடைப்பது இனி சிரமம்தான்” என்றும் துங்கு ரசாலி கூறியுள்ளார்.

நஜிப்பின் தலைமைத்துவம் தொடர்ந்தால் 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெல்ல முடியாது என்றும் அம்னோ தோற்றுவிட்டால் பின்னர் அதனை உயிர்ப்பிக்க முடியாது என்றும் கடுமையான வார்த்தைகளால் மகாதீர் நேற்று தனது நீண்ட கட்டுரையில் விமர்சனம் செய்திருந்தார்

“எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மகாதீர் பதில்களைத் தேடுகின்றார். இதையெல்லாம் சொல்வதற்கு அவருக்கு காரணம் இருக்கும். அரசாங்கம் எப்படி நடத்தப்படுகின்றது, பொதுத் தேர்தலுக்கு முன்பாக எத்தகைய முன்னேற்பாடுகள் செய்யப்படும் என்பதையெல்லாம் நன்கு அறிந்த, 22 வருடம் பிரதமராக இருந்த முதிர்ந்த அனுபவசாலி மகாதீர்” என்றும் துங்கு ரசாலி கூறியிருக்கின்றார்.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் மாமன்னரின் உரை மீது விவாதம் நடத்தும்போது துங்கு ரசாலியும் நஜிப் நிர்வாகத்திற்கு எதிராக பேசியிருந்தார் என்பதோடு ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரியின் அமலாக்கம் குறித்தும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.