Home நாடு தூங்கி வழிந்த படாவி, நஜிப்பை விட சிறப்பாக செயல்பட்டார் – மகாதீர் தொடர் தாக்குதல்

தூங்கி வழிந்த படாவி, நஜிப்பை விட சிறப்பாக செயல்பட்டார் – மகாதீர் தொடர் தாக்குதல்

639
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 16 – என்றுமே சளைக்காத விக்கிரமாதித்தன் பாணியில் தன்மீது நான்கு முனைகளில் இருந்தும் எதிர்த் தாக்குதல் தொடுக்கப்பட்ட போதிலும், துன் மகாதீர், பிரதமர் நஜிப் மீதான தனது கண்டனப் பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார்.

Dr Mahathirபொது நிகழ்ச்சிகளில் தூங்கி வழிவதை வழக்கமாகக் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் துன் படாவி கூட நஜிப்பை விட சிறப்பாக செயல்பட்டார் என்றும் அவரால் 140 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்ல முடிந்தது என்றும் ஆனால் நஜிப் 133 தொகுதிகளை மட்டுமே வென்றார் என்றும் மகாதீர் கூறியிருக்கின்றார்.

படாவி மீதும் கடுமையானக் குறைகூறல்களை ஒரு காலத்தில் மேற்கொண்ட மகாதீர், அவரைப் பதவியிலிருந்து வீழ்த்தி நஜிப்பை அங்கு அமர வைக்கும் முயற்சியில் பெரும் பங்கு வகித்து வெற்றியடைந்தார்.

#TamilSchoolmychoice

‘பேராக் டுடே’ என்ற இணைய செய்தித் தளத்திற்கு வழங்கிய பேட்டியின்போது மகாதீர் இந்த கருத்துகளைத் தெரிவித்தார். பிஆர்எம்1 என்ற பொதுமக்களுக்கான உதவித் தொகை விநியோகத்திற்குப் பின்னரும் முன்பை விட மோசமான தோல்வியைத்தான் நஜிப் சந்தித்தார் என மகாதீர் சாடினார்.

Najib Malaysia“பொதுத் தேர்தலுக்கு மிகக் குறுகிய காலமே இருந்த காலகட்டத்தில் ஏன் பிஆர்எம் 1 பணம் கொடுக்கப்பட்டது?” என கேள்வி எழுப்பிய மகாதீர், “இது இலஞ்சத்திற்கு ஒப்பானது என்பதால் நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை என சீனர்கள் என்னிடம் கூறினார்கள்” என்றும் கூறியுள்ளார்.

பிஆர்எம்1 பணம் கொடுப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட மகாதீர், மக்களுக்கு உதவி என்ற பெயரில் 7 பில்லியன் ரிங்கிட்டை நாம் செலவழித்துள்ளோம், ஆனால், அவர்களுக்கு அந்த நன்றியில்லை என்றும் கூறியுள்ளார்.

பணத் தேவையுள்ளவர்களுக்கு நாம் நிச்சயம் உதவி செய்யத்தான் வேண்டும் ஆனால், அதற்காக அவர்கள் அரசாங்கத்தையே நம்பிக் கொண்டிருக்கும் சூழ்நிலையை உருவாக்கக் கூடாது, மாறாக, அவர்கள் உழைத்து தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றும் மகாதீர் கூறியிருக்கின்றார்.

ஏழைகளுக்கு உதவுவது என்றால் மேம்பாடுகள், கூடுதலான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், வணிக வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற வழிகளில் அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் மகாதீர் வலியுறுத்தியுள்ளார்.