Home இந்தியா ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் 23 ஓட்டங்களில் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது!

ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் 23 ஓட்டங்களில் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது!

589
0
SHARE
Ad

Mumbai Indians Logoமொஹாலி, மே 4 – பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன் அணியும், கிங்ஸ் ஆஃப் பஞ்சாப் அணியும் விளையாடின.

முதலில் பஞ்சாப் அணி பந்து வீசியது. முதல் பாதி ஆட்டத்தில் 20 ஓவர்கள் முடிவடைந்த போது மும்பை அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் பஞ்சாப் அணி 20 ஓவர்களை நிறைவு செய்தபோது, 7 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை மட்டுமே அதனால் எடுக்க முடிந்தது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

Kings of Punjab Logo