Home உலகம் தாய்லாந்தில் தன்னை தானே தம்படம் எடுத்த யானை!

தாய்லாந்தில் தன்னை தானே தம்படம் எடுத்த யானை!

531
0
SHARE
Ad

Thailand elephant selfiதாய்லாந்து, மே 23 – தாய்லாந்தை சேர்ந்த யானை ஒன்று தன்னை தானே எடுத்துக்கொண்ட தம்படம் (செல்ஃபி) சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கானடாவின் வான்கொவ்வர் (Vancouver) பகுதியில் உள்ள பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவரான கிறிஸ்டியன் லீ ப்ளாங்க்(Christian leBlanc).

இவர் தனது தேர்வுக்காக தாய்லாந்தின் பேங்காக்கில் தங்கி படித்துவருகிறார். இந்நிலையில் இவர் தாய்லாந்தில் உள்ள ஒரு வனவிலங்கு பூங்காவுற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு யானைக்கு வாழைப்பழம் வாங்கி வந்து அவர் ஊட்டினார்.

#TamilSchoolmychoice

அப்போது லீ ப்ளாங்கின் செல்பேசியை யானை எடுத்தது. அதில் கேமரா இயங்கிய நிலையில் இருந்ததால் தன்னை தானே தம்படம் (செல்பி) எடுத்துகொண்டது யானை.

யானை எடுத்த இந்த புகைப்படத்தை ‘எல்பி’ (Elphie) என்ற பெயரில் அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.