Home நாடு மாயமான மலேசிய எண்ணெய்க் கப்பல்: பிரதமர் நஜிப் கவலை!

மாயமான மலேசிய எண்ணெய்க் கப்பல்: பிரதமர் நஜிப் கவலை!

545
0
SHARE
Ad

najibகோலாலம்பூர், ஜூன் 15 – ஜோகூரில் மாயமான எண்ணெய்க் கப்பலைக் கண்டறிய அரசாங்கம் உடனடியாக மீட்புக் குழுவினரை அனுப்பும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

“மலேசியாவுக்குச் சொந்தமான அந்தக் கப்பல் மாயமானதை அறிந்து மிகவும் கவலையடைகின்றேன். அதில் இருந்த 22 பணியாளர்களின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்கின்றேன்” என்று தனது பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் நஜிப் தெரிவித்துள்ளார்.

எம்டி ஓர்கிம் ஹார்மோனி என்ற எண்ணெய்க் கப்பல் 6000 டன் ரோன்95 எண்ணெய் மற்றும் 22 பணியாளர்களுடன் மலாக்காவிலிருந்து குவாந்தானுக்கு வந்து கொண்டிருந்த வேளையில் மாயமாகியுள்ளதாக மலேசியக் கடற்படை செயல்பாட்டு அமைப்பு (எம்எம்இஏ) அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

கடைசியாக அக்கப்பல், கடந்த வாரம் வியாழக்கிழமை  இரவு 8.50 மணியளவில், தாஞ்சோங் செடிலியின் கிழக்கே 30 கடல் மைல் தொலைவில் தொடர்பில் இருந்துள்ளது. அதன் பின்னர் திடீரெனத் தொடர்பில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.