Home இந்தியா சாலை விபத்து: ஹேமமாலினியால் தொடரும் சர்ச்சை!

சாலை விபத்து: ஹேமமாலினியால் தொடரும் சர்ச்சை!

581
0
SHARE
Ad

Hemaபுதுடில்லி, ஜூலை 8- நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி கடந்த சில நாட்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கினார்.அவருக்கு நெற்றியில் இலேசான காயம் ஏற்பட்டது.

ஆனால்,எதிரில் வந்த மகிழுந்தில் பயணம் செய்த குழந்தை அந்த இடத்திலேயே இறந்து போனது.

“மீட்புக் குழுவில் இருந்தவர்கள் ஹேமமாலினியைப் பாதுகாப்பதிலேயே குறியாய் இருந்தனர். எங்களைக் கண்டு கொள்ளவில்லை. நாங்கள் அடிபட்டுக் காயத்துடன் கீழேயே விழுந்து கிடந்தோம்.

#TamilSchoolmychoice

பலமாய் அடிபட்டுத் துடித்துக் கொண்டிருந்த என் மகளைக் காப்பாற்ற யாரும் நினைக்கவில்லை.

ஹேமமாலினியுடன் என் குழந்தையையும் உடனே அழைத்துச் சென்றிருந்தால் காப்பாற்றியிருக்கலாம். அவர்களுக்குக் கருணையே இல்லை” என்று மிகுந்த வேதனையோடு கூறியிருந்தார்.

நடிகை, அரசியல்வாதி உயிர் மட்டும் மேலானதா? மற்றவர்கள் உயிர் என்ன அற்பமானதா? என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஹேமமாலினியின் மகிழுந்து ஓட்டுநர் அதிவேகமாக வந்ததே விபத்திற்குக் காரணம் எனக் கைது செய்யப்பட்டுப் பின்பு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஹேமமாலியின் காயத்திற்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் வீடு திரும்பினார்.

இறந்த குழந்தையின் அப்பா மீது ஹேமமாலினி குற்றச்சாட்டு:

இந்நிலையில் அவர் இன்று டிவிட்டரில் அந்த விபத்து குறித்துத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் விபத்தில் இறந்த குழந்தையின் தந்தை சாலை  விதிகளை மதிக்காமல் வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

விபத்திற்குக் காரணம் நானா? ஹேமமாலினிக்கு உயிரிழந்த குழந்தையின் தந்தை பதிலடி:

விபத்து ஏற்பட்ட சாலையில் நாங்கள் செல்ல அந்த ஒரு வழி மட்டுமே உள்ளது என்றும், மேலும் அங்கு திரும்புவதற்கு முன் அறிவிப்புவிளக்கைப்( indicator- ஐப்)    போட்டுவிட்டுத் தான் திரும்பினேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்திற்கு நான்தான் காரணம் என்று கூறும் பெரிய பொறுப்பில் இருக்கும்  ஹேமமாலினி, மனிதாபிமானத்தோடு யோசித்துப் பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தன் மீது பழிசுமத்தும் ஹேமமாலினி அவருடன் தனது  குழந்தையையும் சேர்த்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் எனது   குழந்தை தற்போது உயிருடன் இருந்திருக்கும் என்று மீண்டும் அதையே வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.