Home இந்தியா என்னிடம் பணம் பறிக்க முயற்சி: ரஜினிகாந்த் எதிர் மனுத் தாக்கல்!

என்னிடம் பணம் பறிக்க முயற்சி: ரஜினிகாந்த் எதிர் மனுத் தாக்கல்!

636
0
SHARE
Ad

rajinikanth-old-age-wallpaperசென்னை, ஜூலை 8- எஸ்.முகுன்சந்த் போத்ரா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில் இயக்குநர் கஸ்தூரிராஜா ரஜினிகாந்தின் பெயரைச் சொல்லிப் பணம் வாங்கி மோசடி செய்து விட்டார். இவ்விசயத்தை ரஜினிகாந்திடம் தெரிவித்தேன். ஆனால் இதுவரை அவர் கஸ்தூரி ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், ரஜினிகாந்தும் கஸ்தூரிராஜாவும் கூட்டுச் சேர்ந்து செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் வருகிறது. எனவே, தன்னுடைய பெயரைத் தவறாகப் பயன்படுத்திய கஸ்தூரிராஜா மீது நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினிகாந்த் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

“முகுல்சந்த் போத்ரா தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும்.

என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவும், என்னிடம் பணம் பறிக்கவும் அவர் முயற்சிக்கிறார். அவருடன் எனக்கு எந்த வகையிலும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. கடன் வாங்க நான் உத்தரவாதம் எதுவும், யாருக்கும் அளிக்கவில்லை.

கஸ்தூரி ராஜா மீது நான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

இப்படிப்பட்ட கோரிக்கையுடன் வழக்கைத் தாக்கல் செய்ய முடியாது. எனவே அவரது மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும்.

கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக மனுதாரர் தொடர்ந்த காசோலை மோசடி வழக்கை ஏற்கனவே ஜார்ஜ் டவுன்  நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. எனவே, வேண்டுமென்றே எனக்கு எதிராக இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்துள்ளார்.

இதனால், என்னுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும்” என்று ரஜினிகாந்த் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதையடுத்து, இவ்வழக்கு விசாரணையை 4 வாரத்துக்குத் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.