Home நாடு நஜாடி கொலைக்கும், 1எம்டிபி விவகாரத்திற்கும் தொடர்பும் இல்லை – ஐஜிபி

நஜாடி கொலைக்கும், 1எம்டிபி விவகாரத்திற்கும் தொடர்பும் இல்லை – ஐஜிபி

712
0
SHARE
Ad

khalid1கோலாலம்பூர், ஜூலை 9- அராப் மலேசியா வங்கி நிறுவனரின் கொலைக்கும், 1எம்டிபி பணப் பரிமாற்றத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என ஜஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற கூற்றுகள் பொய்யானவை என்றும், காழ்ப்புணர்ச்சி காரணமாக எழுப்பப்படுபவை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

“சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன் ஹுசைன் நஜாடி காவல்துறையில் எந்தவொரு புகாரும் அளிக்கவில்லை. 1எம்டிபி விவகாரம் குறித்த விசாரணைக்கும், அவரது படுகொலைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரைக் கொன்ற கொலையாளி பிடிபட்டவுடன் அந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது,” என்று அபு பக்கர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் 1எம்டிபியின் பெருந்தொகை செலுத்தப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், அந்தப் பணப் பரிமாற்றத்தையும், நஜாடியின் படுகொலையையும் தொடர்புபடுத்தி வாட்ஸ்-அப் மூலம் பரபரப்புத் தகவல் பரவியது.

மேலும் கடந்த 2013, ஜூலை 28ஆம் தேதி இந்தப் பரிமாற்றம் தொடர்பில் நஜாடி காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும் அத்தகவல் மேலும் தெரிவித்தது.

இந்நிலையில் இவை எல்லாம் வெறும் கட்டுக்கதைகள் எனக் காலிட் அபு பக்கர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இதனிடையே, நஜாடியின் மகன் பாஸ்கல் நஜாடி, தனது தந்தை மரணம் குறித்து ‘சரவாக் ரிப்போர்ட்’ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ள கருத்தும், இச்சந்தேகம் எழுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.