Home இந்தியா மாயமான டோர்னியர் விமானத்தைத் தேடப் புதிய திட்டம்!

மாயமான டோர்னியர் விமானத்தைத் தேடப் புதிய திட்டம்!

718
0
SHARE
Ad

ccசென்னை,ஜூலை 9- சென்னையில் இருந்து கடந்த 8-ந்தேதி புறப்பட்டுச் சென்ற இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ‘டோர்னியர்’ விமானம் 3 பேருடன் மாயமானது. விமானம் காணாமல் போய் நேற்றுடன் ஒரு மாதம்  முடிந்துவிட்டது.

மாயமான விமானத்தைக் கடந்த 30 நாட்களாக இந்தியக் கடலோரப் பாதுகாப்புப்படைக் கப்பல்களும் விமானங்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

சாகர்நிதிக் கப்பல் வருகை:

#TamilSchoolmychoice

நவீனத் தொலை தொடர்பு வசதிகள் கொண்ட ‘சாகர்நிதி’ என்ற கப்பலில் இருந்து தொலை தொடர்புக் கருவிகள் மூலம், மாயமான விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து சமிக்ஞைகள் வருகிறதா என்பது குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது.

ஆனால் சமிக்ஞைகள் விட்டு விட்டு வந்ததால், நம்பகத்தன்மையான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ஒலிம்பிக் கேன்யான் கப்பல் வருகை:

அதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஒலிம்பிக் கேன்யான் கப்பல் 92 மணி நேரம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

ஒலிம்பிக் கேன்யான் கப்பலில் உள்ள ‘ரிமோட்லி ஆபரேட்டிங் வெசல்’ என்ற நவீனக் கருவியில் உள்ள ‘எக்கோ சவுண்டர்’ என்ற எதிரொலிக் கருவி, நீர்மூழ்கி ஒளிப்படக்கருவி, ஒளி வெள்ள விளக்குகள் மற்றும் படப்பிடிப்புக் கருவிகள் மூலம் ஆழ்கடலில் இருண்ட பகுதிகளில் படங்கள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

ஆனால் அதிர்வுகள் விட்டு விட்டு வருவதால் நம்பும்படியான எந்தத் தகவல்களும் முழுமையாகப் பெறமுடியவில்லை.

வெளிநாடுகளுடன் ஆலோசனை:

இந்நிலையில் தற்போது ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகளிடம் தேடுதல் வேட்டை குறித்துக் கலந்தாலோசனை செய்யப்பட்டது.

பல்வேறு சவால்களுக்கு இடையே ஒரு மாதமாகியும் தேடுதல் வேட்டை தொடர்கிறது.

ரேடாரில், விமானம் கடலில் விழுந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதால், விமானம் கடத்தப்பட்டதற்கான கேள்வி எழவில்லை.

‘சீஸ்மெட்டிக்’ தொழில்நுட்பம்:

ஒருமாதம் ஆகிவிட்டதால் கருப்புப் பெட்டி செயலிழந்து விட்டது. இதையடுத்து, வெளிநாடுகளில் நடந்த விமான விபத்துக்களைக் கண்டறிந்த விஞ்ஞானி டி.ஜெயபிரபுவின் ‘சீஸ்மெட்டிக்’ என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

செயற்கைக்கோளில் பதிவான வங்கக் கடல் படம்:

செயற்கைக்கோளில் பதிவான வங்கக் கடல் படங்களைக் கொண்டு தேடத் திட்டமிட்டுள்ளதாகவும் கடலோரக் காவல் படை ஆணையர் எஸ்.பி.சர்மா தெரிவித்துள்ளார்.

vimaa