Home நாடு கோலாலம்பூரில் மேலும் சில இஸ்லாமியத் தீவிரவாதப் போராளிகள் கைது!

கோலாலம்பூரில் மேலும் சில இஸ்லாமியத் தீவிரவாதப் போராளிகள் கைது!

852
0
SHARE
Ad

 IS extremists arrested in KL 9 Julகோலாலம்பூர், ஜூலை 10 – இஸ்லாமியத் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலரை மலேசியக் காவல் துறையின் பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் பிரிவினர் கைது செய்து அழைத்துச் செல்லும் இந்தப் புகைப்படங்களை காவல் துறையினர் நேற்று வெளியிட்டனர்.

இஸ்லாமிய நாடு கோரும் தீவிரவாதக் குழுக்கள் அந்தந்த நாடுகளில் இயங்கிக் கொண்டு, சிரியாவில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதத் தலைவர்களிடமிருந்து நேரடியாக உத்தரவுகளைப் பெற்று, தத்தம் நாடுகளில் தாக்குதல்களைத் தொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அதற்கேற்ப செயல்பட்டு வரும் கவலைக்குரிய போக்கு நிலவுகின்றது என்று காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.

IS Extremists-KL-arrested-9 July 2015

#TamilSchoolmychoice

இந்தத் தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்  அதிரடி வேட்டையைத் தொடக்கிய, மலேசியக் காவல் துறை, இதுவரையில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

படங்கள்: EPA