Home நாடு நஜிப்பின் மனைவி கணக்கில் 2 மில்லியன் ரிங்கிட் பரிமாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல்! 

நஜிப்பின் மனைவி கணக்கில் 2 மில்லியன் ரிங்கிட் பரிமாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல்! 

786
0
SHARE
Ad

NAJIBகோலாலம்பூர், ஜூலை 10 – 1எம்டிபி விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மான்சோரின் வங்கிக் கணக்கில் 2 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகச் சரவாக் ரிப்போர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

1எம்டிபி தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம், கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில் இருந்து, பெரும் அதிர்ச்சியும், சர்ச்சையும் உருவாகி உள்ள நிலையில் சரவாக் ரிப்போர்ட் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமரின் மனைவி ரோஸ்மா மான்சோரின் அஃப்பின் வங்கிக் கணக்கில், இந்த வருடத்தின் தொடக்கத்தில், சரியாக இரண்டரை மாதங்களில் 8 முறை பணம் வைப்புத்தொகையாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மேலும், “1எம்டிபி விசாரணைகளின் படி, ரோஸ்லான் சொஹாரி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 10- தேதி முதல் ஏப்ரல் மாதம் 23-ம் தேதிக்குள் அஃப்பின் வங்கிக்கு எட்டு முறை வந்து சென்றுள்ளார். அவர் மூலமாகத்தான் 2 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.”

#TamilSchoolmychoice

“விசாரணைக் குழுவினர் சேகரித்த ஆவணங்களின் படி, ரோஸ்மா மான்சோரின் வங்கிக் கணக்கில் தான் ரோஸ்லான் பணப்பரிமாற்றம் செய்துள்ளார் என்பது உறுதியாகிறது. அந்த ஆவணங்களில் உள்ள ரோஸ்லானின் தொலைபேசி எண்கள் வாயிலாக அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த முடியாமல் போனது” என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அதிர்ச்சி அளிக்கும் மற்றொரு செய்தி என்னவென்றால், 1எம்டிபியின் தலைவராக இருக்கும் கமருதீன் தான், அஃப்பின் வங்கி பெர்ஹாட்டின் முக்கிய வாரிய உறுப்பினர்களுள் ஒருவர் என்பதாகும்.