Home இந்தியா தனி அறையில் ஆபாச படம் பார்ப்பதைத் தடுக்க இயலாது – டெல்லி உச்சநீதிமன்றம்

தனி அறையில் ஆபாச படம் பார்ப்பதைத் தடுக்க இயலாது – டெல்லி உச்சநீதிமன்றம்

758
0
SHARE
Ad

Supreme Courtபுதுடெல்லி, ஜூலை 11 – இந்தியாவில் ஆபாசப் பட இணைய தளங்களுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர் கமலேஷ் வஷ்வானி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, இந்தியாவில் ஆபாச பட இணைய தளங்களுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது எனக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், தனிநபர் ஒருவர் தனது அறைக்குள் ஆபாச படம் பார்த்தால் அதனை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்? என கேள்வி எழுப்பி உள்ளது.

எனவே, அதற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தால், 18 வயது நிரம்பிய நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி ‘வயது வந்த நான், பூட்டிய அறைக்குள் ‘ஆபாச’ படத்தைப் பார்க்கக் கூடாது என நீங்கள் கூறுவது அரசியல் சட்டப்பிரிவு 21 ன் படி தனிநபர் உரிமையை மீறுவதாகும்’ எனக் கூற வாய்ப்புள்ளது. இதனால், வயது வந்த நபர் ஒருவர் தனி அறைக்குள் ‘ஆபாச’ படத்தை பார்ப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க முடியாது.

#TamilSchoolmychoice

அதேவேளையில், ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது அவசியமானதே. இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டே தீர வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. இதுகுறித்து மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.