Home உலகம் அனகோண்டாவின் வயிற்றைக் கிழித்த கிராமவாசிக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

அனகோண்டாவின் வயிற்றைக் கிழித்த கிராமவாசிக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

720
0
SHARE
Ad

anaconda2குவாருஜா, ஜூலை 11 – தென் அமெரிக்காவின் குவாருஜா பகுதியைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடர் காட்டுபகுதி ஒன்றிற்கு தனது சகாக்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, மிகப் பெரிய அனகோண்ட ஒன்று ஏதோ ஒரு விலங்கை விழுங்கி விட்டு சாகும் நிலையில் கிடந்தது. வயிறு வீங்கிய நிலையில் அந்த அனகோண்ட கிடந்ததை பார்த்த அந்த கிராமவாசி, தனது கையில் இருந்த கத்தியைக் கொண்டு அதன் வயிற்றைக் கிழிக்கத் தொடங்கினார்.

அப்போது அவர் கண்ட காட்சி அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறந்த அனகோண்டாவின் வயிற்றுக்குள் மற்றொரு பெரிய அனகோண்டா இறந்து கிடந்துள்ளது. கிராமவாசியின் சகாக்கள் அதனை அப்படியே காணொளி எடுத்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

இதுவரை அனகோண்ட மற்ற விலங்குகளை விழுங்கியதையும், அதிர்ச்சிகரமாக மனிதர்களை விழுங்கியதைப் பற்றியும் தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு அனகோண்டா, மற்றொரு அனகோண்டவை விழுங்கி இருப்பது அரிதான ஒன்று.

#TamilSchoolmychoice

anaconda1இந்த சம்பவம் நடந்திருப்பது பிரேசில் வனப்பகுதி என்று கூறப்படுகிறது. இயற்கை வளங்கள் நிறைந்த பிரேசிலில், காடுகள் அழிக்கப்பட்டதால் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வன உயிரினங்களும் செத்து மடிந்து வருகின்றன. வாழ்க்கை சுழற்சியில் (Life Cycle) ஒரு விழுங்கு மற்ற இன விலங்குகளைத் தான் உண்டு உயிர் வாழும். இது போன்ற அரிதான சம்பவம், தற்செயலாக நடந்ததா? அல்லது இதற்கும் காடுகள் அழிப்பிற்கும் தொடர்பு உள்ளதா? என்று தெரியவில்லை.

இதன் காணொளியைக் கீழே காண்க: