Home கலை உலகம் “நானும், இந்திய சினிமாவும் அனாதைகளானோம்” – எம்எஸ்வி மறைவு குறித்து எஸ்பிபி கண்ணீர்

“நானும், இந்திய சினிமாவும் அனாதைகளானோம்” – எம்எஸ்வி மறைவு குறித்து எஸ்பிபி கண்ணீர்

674
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 14 – ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவை அறிந்த, புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேஸ்புக் மூலமாகத் தனது அளவிடமுடியாத சோகத்தைப் பகிர்ந்துள்ளார்.

Untitled

தற்சமயம் தான் அமெரிக்காவில் உள்ளதை எண்ணியும் எஸ்பிபி மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, கடந்த மே மாதம் எம்எஸ்வி அவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட படம் ஒன்றை எஸ்பிபி தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது அனைவரையும் பேரதிர்ச்சியடைய வைத்துள்ளது.

MSV

காரணம், எப்போதும், நெற்றி நிறைய திருநீரும், சந்தனமும், குங்குமமுமாக பார்ப்பதற்கு மங்களகரமாக இருக்கும் எம்எஸ்வி, அப்படத்தில் மிகவும் எடை குறைந்து, அடையாளமே தெரியாத அளவிற்கு உருகுலைந்து இருக்கிறார்.

அதைக் கண்ட ரசிகர்கள், அதிர்ச்சியடைந்ததோடு, தற்போது வரை அதில் உள்ளது எம்எஸ்வி கிடையாது என கண்ணீருடன் பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.